Category:
Created:
Updated:
வவுனியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் நகரின் பல்பேவறு பகுதிகளிலும் இராணுவத்தால் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று (16) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சுகாதாரப் பிரிவினரின் ஆதரவுடன் வவுனியா நகரில் மக்கள் அதிகமாக வந்து செல்கின்ற இடங்களை மையப்படுத்தி கொரோனா தொற்று நீக்கும் செயற்பாடுகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரச அலுவலகங்கள், நகரின் பிரதான வீதிகள், கடைத் தொகுதிகள், மரக்கறிச் சந்தை என்பன இராணுவத்தினரால் கிருமி தொற்று நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன.
இதில் இராணுவத்தினருடன் இணைந்து வவுனியா நகரசபையினர், சுகாதபரப் பரிசோதர்கள், பொலிசார் ஆகியோரும் தொற்று நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்திருந்தனர்.