இலங்கை கிரிகெட் அணியின் ஆரோக்கியத்தை மனதிற்கொண்டு பயிற்றுவிப்பாளரை தேடும் இலங்கை கிரிக்கெட் சபை
இலங்கை கிரிகெட் அணி விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் நிலையில், கடந்த புதன்கிழமை இலங்கை கிரிகெட் அணியின் ஆலோசகரும் பயிற்றுவிப்பாளருமான மஹேல ஜெயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
இந்த அதிர்ச்சில் இருந்து மீள்வதற்கு முன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கிறிஸ் சில்வர்வுட், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது.
2024 ஆம் ஆண்டு கிரிகெட் டி20 உலகக்கோப்பையிலிருந்து இலங்கை அணி முன்கூட்டியே வெளியேறி இருந்தது. இதனைத் தொடர்ந்து கிறிஸ் சில்வர்வுட் உட்பட ஏனைய பயிற்றுவிப்பாளர்களை பணிநீக்கம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்றுவிப்பாளரின் வழிநடத்தலில் ஆசியக்கிண்ணத்தை இலங்கை கிரிகெட் அணி கைப்பற்றியிருந்து.
அதன் பின்னரான காலப்பகுதியில், இலங்கை அணியில் பெரியளவிலான முன்னேற்றங்கள் எதுவும் இருக்கவில்லை. குறிப்பாக ஐசிசி உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை மிகவும் மோசமாக விளையாடியிருந்தது. இதனைத் தொடர்ந்தே, தலைமை பயிற்றுவிப்பாளராக கிறிஸ் சில்வர்வுட் தெரிவுசெய்யப்பட்டார்.
தற்போதைய நிலையில், இலங்கையின் தேசிய கிரிகெட் பயிற்சியாளராக சில்வர்வுட்க்கு பதிலாக யாரை நியமிக்க முடியும் என்ற கேள்வி தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கிரிகெட் அணியை பொறுத்தவரை சிறந்த பயிற்சியாளர்களையே கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. உதாரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் டேவ் வாட்மோர் தலைமையிலான அரை- தொழில்முறை கிரிகெட்டை விளையாடும் ஒரு பயிற்சிக்களமாக இலங்கை கிரிகெட் அணி அப்போது மாறியிருந்தது.
அதனைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு இலங்கை கிரிகெட் அணி உலகக்கிண்த்தை வாகைசூடியிருந்தது.
அக்காலகட்டத்தில் இலங்கை கிரிகெட் அணியின் மீது அனைத்து உலக நாடுகளும் கவனம் செலுத்திய ஒரு பொற்காலமாகவும் அது மாறியது. அதனைத் தொடர்ந்து 2005 - 2007வரையான காலப்பகுதியில் டாம் மூடின் கட்டுப்பாட்டில் இலங்கை கிரிகெட் அணி இலங்கை தொடர் வெற்றிகளை பதிவு செய்திருந்தது.
உண்மையில் இலங்கையின் பொற்காலம் 2000 முதல் 2014 வரை என்றே கூறவேண்டும். காரணம் உலகில் எந்த அணிக்காகவும் விளையாடக்கூடி உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அப்போதைய காலத்தில் தான் இருந்தார்கள்.
அதிலும் கசப்பான உண்மை என்னவென்றால், தற்போதைய அணி அதற்கு 10 விகிதமேனும் ஈடுகொடுக்காது என்பதேயாகும். இந்திய அணியின் அடுத்த பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நிச்சியம் வருவார் என உறுதியாக தெரிவதாக கிரிகெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதற்கு நிகரான ஒரு பயிற்றுவிப்பாளர் தற்போது இலங்கை அணிக்கு தேவைப்படுவதாக பேசப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா, அணி தோல்வியடையும் போதெல்லாம், உலகக் கோப்பையில் அவர்கள் செய்த விதம், அவர்களின் நிதிச் செல்வத்தைப் பற்றி தற்பெருமை காட்டிக்கொண்டே இருக்கிறார் - எனவே அவர்கள் தசையை வளைத்து விளையாடுவதற்கு ஒரு பயிற்சியாளரைப் பெறுவதற்கான நேரம் இதுவாகும் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்.
மறுபுறம், இலங்கை கிரிகெட் அணி விளையாடிய விதத்தில் சில்வர்வுட் பற்றி உண்மையில் அதிகம் பேசப்படவில்லை என்று உணரப்பட்டது.
பயிற்றுவிப்பாளரான மஹேல ஜயவர்தன அந்த அமைப்பில் ஒரு அங்கமாக இருந்ததால், பெரும்பாலான முடிவுகள் அவரால் எடுக்கப்பட்டவை என்று பலர் நம்பினர். மேலும், கடந்த காலங்களில் சில கேள்விக்குரிய அணித் தேர்வுகள், இலங்கை கிரிக்கெட் பேரவையால் தாக்கம் செலுத்தியிருக்கலாம் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
மேலும் குறிப்பிட்ட ஒரு வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்துக்கொண்டால் தான் உலகக்கோப்பை போட்டியின் போது விளையாட மாட்டடேன் என பிரபல இலங்கை வீரர் ஒருவர் கூறி வருவதாகவும் குறித்த வேகப்பந்து வீச்சாளருக்கு மிரட்டல்கள் விடுத்திருப்பதகாவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை கிரிகெட் அணியின் ஆரோக்கியத்தை மனதிற்கொண்டு அரசியல் தலையீடுகள் அற்ற ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளரை தேர்ந்தெடுப்பது காலத்தின் கட்டாயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது
0