Category:
Created:
Updated:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மாநிலம் தழுவிய சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் சில இடங்களில் மக்கள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை.
நாளைமறுதினத்தில் இருந்து ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா நிவாரண பொருட்களாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம் உள்ளிட்ட 13 மளிகை பொருட்களை வழங்கப்பட இருக்கிறதுது. ஜூன் 3 ஆம்தேதியில் இருந்து வழங்கப்படும் எனத் தெரிகிறது.