இந்திய அணி இரண்டாவது டுவென்டி-20 போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சிட்னியில் நடந்த இரண்டாவது 'டுவென்டி-20' போட்டியில் பாண்ட்யா சிக்சர் அடித்து இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியவை வென்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆரோன் பிஞ்ச் காயம் அடைந்துள்ளதால், ஆஸி. அணி விக்கெட் கீப்பர் மேத்யூ வேடு தலைமையில் களமிறங்கியது. அந்த அணியில் டேனியல் சாம்ஸ் (28 வயது) அறிமுகமானார். ஸ்டாய்னிஸ் அணிக்கு திரும்பினார்.
வேடு, ஷார்ட் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஆஸ்திரேலிய அணி 20 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் நடராஜன் 2, சகால் 1, ஷர்துல் தாகூர் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய சார்பில் ராகுலும் தவாலும் இன்னிங்சை தொடங்கினர். முதல் 2 ஓவரில் 9 ரன் மட்டும் எடுத்த இந்தியா, ஆன்ட்ரூ வீசிய 3வது ஓவரில் 15 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெலின் அடுத்த ஓவரில் 19 ரன்கள் அடித்தது. 4.5 ஓவரில் இந்தியா 50 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா 2-0 என முன்னிலை பெற்று 'டுவென்டி-20' தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. 3வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் (08-12-2020) இந்திய - ஆஸ்திரேலிய விளையாடுகிறது..