கச்சாய் தெற்கை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தனபாலசிங்கம் பாக்கியலட்சுமி 29/03/2021 இன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார் அரியகுணராசா (ராசா கொலண்ட்), கலாதேவி (கலா சுவிஸ்), கலைமதி (மதி ஜேர்மன்), சசிகலா (பிறான்ஸ்), கலைச்செல்வி (பிறான்ஸ்), கலைவதனி (வதனி சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும். சிவலோகநாதன் (சுவிஸ்),அமரர் உமாபதிசிவம்,சோமஸ்காந்தன் (பிறான்ஸ்),சுதாகரன் (சுதன் சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 30/03/2021 செவ்வாய் பிற்பகல் 1 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று, கச்சாய் எறியால்பிட்டி இந்துமயானத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்- சிவலோகநாதன் (செல்வம் சுவிஸ்) 004178 6867616.
சுதன் - (சுவிஸ்) 004177504 5827.