- · 5 friends
-
I

துக்க வீடுகளில் பலர் செய்யும் தவறான செயல்கள் எவை?
1. உற்றார் உறவினர்களை கண்டவுடன் சில நேரங்களில் தங்களை அறியாமல் சிரித்து விடுவது அது துக்கத்தில் இருப்பவர்கள் பார்த்தால் மனவேதனை படுவார்கள்.
2. மரணமடைந்தவரின் வாழ்க்கையை எதார்த்தமாக விமர்சித்து கொண்டிருப்பது.
3. உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் மரணிக்க வேண்டும் ஆனால் தாங்கள் மட்டும் பல நாட்கள் இந்த உலகத்தில் வாழ்வது போலவும் மற்றவர்கள் வேகமாக மரணிப்பது போலவும் ஜம்பம் அடிப்பது.
4. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான மரணத்திற்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் இருக்கும். ஆனால் சிலருக்கு அதில் உடன்பாடு இருக்காது. இருந்தாலும் அந்த சூழ்நிலையை அனுசரித்து செல்ல வேண்டும். அதைவிடுத்து அப்படி செய்யவில்லை இப்படி செய்யவில்லை என்று வீராப்பு செய்து கொண்டிருப்பார்கள்.
5. தந்தை அல்லது தாய் ஓரளவு பொருளாதார உயர்வு நிலையை அடைந்து இறை நிலையை அடைந்திருந்தால் அந்த பொருளாதாரத்தை எவ்வாறு பிரித்து எடுப்பது என்று பெற்ற பிள்ளைகளும் உடன்பிறந்த சகோதரர்களும் , சகோதரிகளும் மற்றவர்களும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முக்திக்கான கடைசி கால பயணத்தை முறையாக செய்ய மாட்டார்கள்.
6. இப்போது உள்ள காலத்தில் பல முறைகள் மாற்றப்பட்டுவிட்டன. இருந்தாலும் ஓர் உயிரற்ற உடல் உயிர் இருக்கும் போது பல ஆசைகள் மனதில் வைத்திருக்கும். அது பல நேரங்களில் வெளிப்பட்டு இருக்காது மரணத்திற்கு பின் தன் உடலை தன் சுற்றத்தார் தூக்கி செல்ல வேண்டும்; அவர்களே தன் இறுதிக் கடன்களை முறையாக செய்ய வேண்டும் என எண்ணி இருப்பார்கள். ஆனால் பல படித்த ஜாம்பவான்கள் வேலையாட்களை வைத்து இறுதிப் பயணத்தை முடித்து வைப்பார்கள். தாங்கள் கட்டிய வேட்டியும் சட்டையும் கசங்காமல் வருவார்கள்.
7. இன்னும் சிலர் நேரம் ஆகிறது நேரமாகிறது என்று மறைமுகமாக கூறிக்கொண்டே இருப்பார்கள்.
8. வாழும் காலத்தில் அந்த உயிரற்ற உடல் பலருக்கும் நன்மை செய்திருக்கும், தீமையும் செய்திருக்கலாம்; அவர்கள் மனதினுள் உணர்வை அறியாமல் வேண்டப்பட்டவர்கள் கடைசிநேர பயணத்தில் உடன் இருக்க மாட்டார்கள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·