-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 6.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
மனதில் புதிய திட்டங்கள் தோன்றும். அக்கம், பக்கம் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். புதுமையான சிந்தனைகள் மனதில் பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
மிதுனம்
தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். வியாபாரம் தொடர்பான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். பொன், பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
சிம்மம்
அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கணுக்களில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனப் பேச்சுக்கள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உழைப்புகள் உயரும். பயனற்ற பேச்சுக்களை குறைப்பது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
நெருக்கமானவர்களின் இடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான சில எதிர்ப்புகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். பயனற்ற வாக்குறுதிகளை குறைத்துக் கொள்ளவும். ரகசியமான சில முதலீடுகள் மேம்படும். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
வெளியூர் தொடர்பான பணிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் மறையும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் உண்டாகும். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். உற்சாகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
விருச்சிகம்
சமூகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சமூகம் சார்ந்த நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
உடலை வருத்திய சில பிரச்சனைகள் விலகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு ஏற்படும். உயர்கல்விகள் முன்னேற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இறை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். புதிய முடிவுகளில் விவேகம் வேண்டும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வாடிக்கையாளர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
கும்பம்
மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். சுப காரியம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் தனித்திறமை வெளிப்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மீனம்
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் உருவாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை விருத்திக்கான எண்ணங்கள் கைகூடும். மற்றவர்களின் கருத்துக்களில் உள்ள உண்மை அறிந்து முடிவெடுக்கவும். ஓவியத்துறைகளில் சாதகமான சூழல் அமையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·