Ads

இதற்காகவா இவர் ஓடுகிறார்?

0 0 0 0 0 0
  • 247
Info
Title:
இதற்காகவா இவர் ஓடுகிறார்?
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
00:34
Category:
Created:
Updated:
 ·   · 160 videos
  •  · 16 friends
  •  · 19 followers
Comments (0)
    இதற்காகவா இவர் ஓடுகிறார்?
    Empty
    typing a message...
    Connecting
    Connection failed
    Ads
    Latest Videos
    Advertisement
    Ads
    Featured Videos (Gallery View)
    Ads
    Added a news 
    கிளிநொச்சி  தருமபுரம்  பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட   புன்னைநீராவி  நாதன் குடியிருப்பு பகுதியில்  20  01.2022  அன்றையதினம் நள்ளிரவு   11 .50 மணியலவில்  தாயும் தனது  17 வயது மகளும்  தீயில் எரிந்து  உருக்குளைந்த  நிலையில்  காணப்பட்டுள்ளது.இச்  சம்பவம்  தொடர்பாக   தருமபுர பொலிசாருக்கு  தகவல் வழங்கப்பட்டதையடுத்து  சம்பவயிடத்திற்கு  விரைந்த தருமபுரம்  பொலிசார்  சம்பவம்  தொடர்பாக    மேலதிகவிசாரனைகளை   ஆரம்பித்துள்ளனர்.  இச் சம்பவம்  நடைபெற்றபொழுது  தந்தையும்  மகனும் வெளிமாவட்டத்தில் குடும்பசுமைகாரணமாக கூலிவேலைக்கு வெளி மாவட்டத்திற்கு  சென்ற சமையமே  இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.இது தொடர்பாக தருமபுரம்  பொலிசார்  மேலதிக விசாரனைகளை  ஆரம்பித்துள்ளனர்.  இச்சம்பவம்  தற்கொலையா அல்லது  கொலையா என  பொலிசார்  தீவிர விசாரனைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இச்சம்பவத்தில்  இறந்தவர் 47 வயதுடைய  ஆனந்தராசா சீதேவி  07பிள்ளைகளின் தாயாரும்  அவரது மகள்  17 வயதுடைய லக்சிகா இவர்களே    இறந்தவர்கள்  ஆவார்கள்.  மேலதிக விசாரனைகளை தருமபுரம்  பொலிசார்  தொடர்ந்து  மேற்கொண்டு வருகின்றனர்.
    • 13
    Added a video 
    குறித்த ஆமையை பரிசோதனையின் பின் வட மாகாண மிருக வைத்தியர் மருதங்கேணி தாளையடி கடலில்  விடுவிக்கப்பட்டுள்ளது.
    • 25
    Added article 
    மகேஷ்பாபு நடிக்க இருக்கும் அண்ணன் தங்கை கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் மகேஷ்பாபுவும் அவருக்கு தங்கையாக நடிக்க பிரபல நடிகை சாய் பல்லவியும் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.முதலில் இந்த படத்தில் நடிக்க சாய்பல்லவி தயங்கியதாகவும் பின்னர், இயக்குனர் திரிவிக்ரம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
    • 34
    Added article 
    கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் தமிழில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். 'வஞ்சகர் உலகம்' திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசரை நடிகர்கள் ஆர்யா மற்றும் ஜீவா தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். 
    • 34
    Added a news 
    இங்கிலாந்தின் லிவர்பூலின் புறநகர்ப் பகுதி ஐக்பர்த்தை சேர்ந்தவர் காரா சுட்டன்( 26). இவர் தனது காதலன் ஜேம்சுடன் ( 25 )  விடுமுறையை கொண்டாட கடந்த 5 மாதங்களூக்கு முன்  சைக்கிளில் நார்த் வேல்ஸில் உள்ள கோட்-ஒய்-ப்ரெனின் என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.அங்கு மலை உச்சியின் ஓரத்தில் நின்று அழகை ரசிக்கும்  போது   நிலைதடுமாறி அவர்  மலை உச்சியில் இருந்து சைக்கிளோடு கீழே விழுந்தார்.  காரா அதிர்ஷ்டவசமாக தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டாத காரணத்தால் பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பினார் . எலும்பு முறிவு, இடுப்பு எலும்பு முறிவு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உயிர் பிழைத்தார்.ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு உரிய நேரத்திற்கு கொண்டு சென்றதால் ஐந்து மாதத்தில் மருத்துவர்களின் உதவியினால் மீண்டு வந்துள்ளார்  காரா.
    • 34
    Added a news 
    ரஷியா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.உக்ரைன் மீது படையெடுக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பு ரஷியா தான். உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா பேரழிவை சந்திக்கும். ரஷியாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட்டாளிகள் தயாராக உள்ளனர்.600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளேன். உக்ரைனுக்குள் நுழைய ரஷிய படைகள் உண்மையான விழைவுகளையும் மிகப்பெரிய மனித உயிரிழப்புகளை விலையாக கொடுக்க நேரிடும்.உக்ரைன் எல்லை நோக்கி ரஷியா மேலும் முன்னேறி செல்லும் பட்சத்தில் அதிபர் புதின் (ரஷியா) தான் இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை பார்க்க நேரிடும்’ என்றார்.உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் போர் ஏற்படும் அச்சம் நிலவி வருகிறது.
    • 57
    Added a news 
    விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் முகக்கவசம் அணிய மறுத்ததால் மியாமியிலிருந்து லண்டன் பயணித்த அமெரிக்க ஜெட்லைனர் விமானம் அவசரமாக மியாமிக்கே திருப்பி அனுப்பப்பட்டது .129 பயணிகள் மற்றும் 14 ஊழியர்களுடன் போயிங் 777 விமானம் ஒன்று  மியாமர் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.விமானம் நடுவானில் பறந்த போது  ஒருவர் மட்டும் முகக்கவசம் அணியவில்லை.  விமான ஊழியர்கள் கேட்டுக்கொண்டும் அவர் கேட்கவில்லை. இதனால்  வேறுவழியின்றி விமானி விமானத்தை மீண்டும் மியாமிக்கே திருப்பினார்.விமானம் மியாமியில்  தரையிறங்கியதும் அனைத்து பயணிகளையும் போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். முகக்கவசம் அணிய மறுத்த நபரை தடை செய்யப்பட்ட பயணிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக அமெரிக்க விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
    • 58
    Added a news 
    வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் குன்னூர் அருகே இளித்தொரை கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அண்மையில் என்னை சந்தித்தவர்கள் பாதுகாப்பாக இருந்து கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளார்.இன்று காலை வணிகத்துறை அமைச்சர் மூர்த்திக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    • 59
    Added a news 
    பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க  இன்று (20) கொழும்பு 07 சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்தை, இலக்கம் 58 இல் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார்.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் பிரதமரின் புதிய செயலாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.இதன்போது மஹாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரின் புதிய செயலாளர் டீ.எம்.அனுர திசாநாயக்க அவர்களை ஆசீர்வதித்தனர்.
    • 59
    Added a news 
    2022 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு மேலதிகமாக அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக இந்த பிரிவின் வைத்தியர் இந்திக வீரசிங்க தெரிவிக்கையில், படிப்படியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்.இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக வைத்தியர் இந்திக வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
    • 62
    Added a news 
    ராஜகிரிய விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை பெப்ரவரி 18 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவருக்கு பாரிய வாகன விபத்தை ஏற்படுத்தியமை மற்றும் உரிய சாட்சியங்களை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த தினம் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் இதன்போது நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.இதன்போது, கடந்த 11ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குற்றம் சாட்டப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக வைத்திய அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.இந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், அதனை வெளியிட்ட வைத்தியரிடம் வாக்குமூலம் பெறுமாறு குற்றப் பிரிவினருக்கு உத்தரவிட்டதை நினைவுகூர்ந்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சம்பிக்க ரணவக்கவின் உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
    • 62
    Added a news 
    முச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சி சென்று திரும்புகையில் பேருந்து ஒன்றுக்கு இடம் கொடுக்க முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி குளத்தின் துருசு பகுதியில் உள்ள பாலத்தில் விழுந்துள்ளது.  சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியை சேர்ந்த தியாகராச சிவநாதன் என்ற 54 வயதுடையவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.இதேவேளை இவருடன் பயணித்த மற்றொருவரை காணவில்லை என சாரதியின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.
    • 62
    Added a news 
    கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார். இன்று காலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்தார்.தொடர்ந்து கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன், வைத்தியசாலை பணிப்பாளர் சுகந்தன் மற்றும் வைத்தியர்களுடன் விசேட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.இதேவேளை குறித்த தீ விபத்து தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் தடயவியல் பொலிசார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை.
    • 61
    Added a poem 
    யாருக்கும் தெரியாதுஎனக்குள்சமாதியாகிப் போன சந்தோஷங்கள்......
    • 69
    Added a post 
    சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம். நமக்கு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையான நாளை சங்கடஹர சதுர்த்தி. சுக்கிர யோகத்தைத் தந்தருள்வார் கணபதி.முருகப்பெருமானுக்கு தைப்பூசமும் கார்த்திகை மாதத்தின் கார்த்திகைப் பெருவிழாவும் பங்குனி மாதத்தில் உத்திரமும் வைகாசி மாதத்தில் விசாகமும் முக்கிய தினங்களாகவும் விரத நாளாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றிலும் விநாயகர் வழிபாடு என்பதும் தரிசனம் என்பதும் முதலில் நடைமுறையில் இருப்பதை அறிவோம். அதன்படியே நாமும் வழிபடுவோம். அதன் பிறகே அந்தந்த கடவுளர்களை வணங்குவோம்.பூஜையோ ஹோமமோ செய்வதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்கிவிட்டுத்தான் பூஜையைத் தொடங்குவோம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, பூஜிக்கிறோம்தானே. ஏனென்றால்... ஆனைமுகத்தானே முதற் கடவுள். முழு முதற் கடவுள்.இத்தனை மகத்துவம் மிக்க பிள்ளையாருக்கு மாதந்தோறும் வருகிற சதுர்த்தி நாளில், வழிபாடுகளும் விரதங்களும் இருப்பது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும். இந்த நாளை, சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.அற்புதமான அதிர்வுகள் கொண்ட சங்கடஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு அருகம்புல் மாலையும் வெள்ளெருக்கு மாலையும் சார்த்தி வழிபடுவது எண்ணியதையெல்லாம் நிறைவேற்றித் தரும் என்கிறார்கள் விக்னங்களையெல்லாம் அழித்து அருள் செய்வார் விக்னேஸ்வரர்.சங்கடஹர சதுர்த்தி நாளில், வீட்டில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். இன்று ஜனவரி 21ம் தேதி வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி. வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்பார்கள். விநாயகர் படத்தை, சுத்தமாகத் துடைத்து, சந்தனம் குங்குமமிடுங்கள். அருகம்புல் சார்த்துங்கள். விநாயகருக்கு ரொம்பவே இஷ்டமான கொழுக்கட்டை, பாயசம், சுண்டல் என உங்களால் முடிந்ததை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.*சுக்கிர வாரத்தில் சங்கடஹர சதுர்த்தி நாளும் வருவது இன்னும் சிறப்பு வாய்ந்தது.* கணபதி துதிகளைச் சொல்லுங்கள். கஷ்டமெல்லாம் தீர்ப்பார் கணபதி. சுக்கிர யோகங்களையெல்லாம் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.
    • 76
    காலை வணக்கம்
    • 76
    Added a news 
    கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமுனை கடலில் கடலாமையின் ஒருவர் முழங்காவில் பொலிஸார் நேற்று பிற்பகல் கைது செய்த நிலையில் குறித்த சந்தேக நபரையும் கடலாமையும் வனவளத் திணைக்களத்தின் இடம் ஒப்படைக்கப்பட்டு குறித்த சந்தேக நபரை வனவளத் திணைக்களத்தின்.கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று முறைப்படுத்தப்பட்டது.குறித்த சந்தேக நபரை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிப்பு நீதவான் எதிர்வரும் ஐந்தாம் மாதம் ஐந்தாம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.குறித்த ஆமையை மிருக வைத்தியர் பரிசோதனையை தொடர்ந்து கடலில் விடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த ஆமையை பரிசோதனையின் பின் வட மாகாண மிருக வைத்தியர் மருதங்கேணி தாளையடி கடலில்  விடுவிக்கப்பட்டுள்ளது.
    • 78
    Added a news 
    நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் உரை, அனைத்து மக்களையும் அணைத்து செல்லும் உரையாக அமையவில்லை.எனவே இந்த நாடு சரியான பாதையில் செல்லவேண்டுமானால், ஜனாதிபதி தமது மனதை இராணுவ மனநிலையில் இருந்து சிந்திப்பதை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று சிறீதரன் எம்.பி குறிப்பிட்டார்.
    • 79
    Added a news 
    கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று (20-01-2022) நள்ளிரவு 11.45 மணியளவில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து  பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பகுதியில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டு குறித்த தீ விபத்து கரைச்சி பிரதேச சபையில் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.தொடர்ந்து இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.குறித்த தீ விபத்து சம்பவத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர், இராணுவ உயர் அதிகாரிகளின் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்கள் கண்காணிப்பில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த சம்பவத்தில் மார்பு நோய், பாலியல் நோய், லாப், களஞ்சியம், வைத்தியர் அறை ஆகியன எரிந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
    +2
    • 78
    வெள்ளிக்கிழமை காலை வணக்கம்
    • 78
    கூட்டமாக சுற்றும் நெருப்புக் கோழிகளுக்கு பெண் கோழிகள்தான் தலைமை வகிக்கும்.நெருப்புக்கோழிகள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக் கொள்வதென்றால் வால் பகுதியை ஆட்டும்..தலையையும் அசைக்குமாம்.
    • 82
    *அறிந்து கொள்வோம்*மனித உடலும்,சில உண்மைகளும்.********************************* சராசரி மனித உடலில் ரத்த அளவு, 5.5லீட்டர்.* தினமும் மனித உடலில் இருந்து வெளியேறும் சிறு நீரின் சராசரி  அளவு, 1.5 லீட்டர்.* மனிதன் சராசரி அருந்த வேண்டிய நீர், 6லீட்டர்.* மிகவும் குளிர்ச்சியான பகுதி, மூக்கு.* வியர்க்காத உறுப்பு ,உதடு.* சிவப்பணுவின் சராசரி ஆயுட் காலம், 120 நாட்கள்.* இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த் துடிப்பு நீடிக்கும் நேரம்,20 நிமிடங்கள்.* நகம் வளரும் வருட சராசரி அளவு,10.5 செ.மீற்றர்.* வியர்வை சுரப்பிகளின் சராசரி  எண்ணிக்கை,2 லட்சம்.
    • 81
    Good Morning....
    • 83
    • 83
    #வெள்ளி வணக்கம்#
    • 82
    Added article 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் ஹேய் ஜுட் என்ற மலையாள திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் நாயகனாக நிவின் பாலி நடித்து இருந்தார். இந்த படம் மலையாளத்தில் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆஹா என்ற ஓடிடியில் ஜனவரி 21-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 117
    Added a news 
    மில்கோ நிறுவனத்தின் தலைவராக ரேணுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளராகவும் கடமையாற்றுகின்றார்.இதுவரை அதன் தலைவராக இருந்த லசந்த விக்ரமசிங்க, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நேற்று (19) பல ஊடகங்கள்செய்தி வெளியிட்டிருந்தன.
    • 113
    Added a news 
    நாடாளாவிய ரீதியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இன்று (20) மற்றும் நாளைய தினம் (21) டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த வகையில் வவுனியா நகரசபையினரினால் முன்னெடுக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றிருந்தது.டெங்கு நோயிலிருந்து எம்மை பாதுகாப்போம் நுளம்பு பெருகும் இடங்களை இல்லாமல் செய்வோம் ‘ எனும் தொனிப்பொருளில் நகரசபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் பகுதியிலுள்ள கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு முன்பாக இன்று (20.01.2022) காலை 8.45 மணியளவில் இடம்பெற்றது.இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர கலந்து சிறப்பித்திருந்ததுடன் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தெய்வெந்திரம் ரதீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களான வவுனியா பிராந்திய தொற்று நோயியிலாளர் வைத்தியர் லவன் மற்றும் விருந்தினர்களாக நகரசபை உறுப்பினர் , சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.நகரசபை செயலாளர் இ.தயாபரன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இவ் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தில் பிரதம , சிறப்பு , கௌரவ விருந்தினர்கள் டெங்கு பெருகும் இடங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றி டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர். அதனைத்தொடந்து அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் வழிகாட்டலில் வவுனியா பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பூந்தோட்டம் , பெரியார்குளம் , குடியிருப்பு ஆகிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் அமல்படுத்தப்பட்டது.வீடுகளில் டெங்கு பரவும் இடங்கள் அடையாளம் காணப்படின் வீட்டின் உரிமையாளருக்கு முதலாவது எச்சரிக்கை வழங்குவதுடன் தேவையற்ற கழிவுகள் இருப்பின் நகரசபை வாகனத்தில் ஏற்றப்பட்டது. மேலும் கிணறுகளில் மீன்கள் விடும் நடவடிக்கையும் இடம்பெற்றிருந்ததுடன் வீதியோரங்களில் காணப்படும் கழிவுகள் நகரசபை சுகாதார பணியாளர்களினால் அகற்றப்பட்டது.
    • 129