Ads
உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிப்பு
2023 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோரும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன.
அத்துடன், அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களினால் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை மீளக் கையளிப்பதற்கும் இந்த சட்டமூலத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
000
Info
Ads
Latest News
Ads