பதில் காவல்துறைமா அதிபரைச் சந்திகும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
பேருந்து போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வாரம் பதில் காவல்துறைமா அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதுவரையில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் அடுத்த வாரம் மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக ஒத்திவைக்க உள்ளதாகவும் அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
தற்போது, பயணிகள் பேருந்துகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கை குறித்து பாரிய எதிர்ப்பு எழுந்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் அநாவசியமாகப் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் மற்றும் ஏனைய அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
எனினும், குறித்த சோதனை நடவடிக்கையின்போது, முன்னெடுக்கப்படும் சில விடயங்கள் முரணான வகையில் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாகப் பதில் காவல்துறைமா அதிபருடன் கலந்துரையாடுவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், அதுவரையில் பணிப்புறக்கணிப்பை ஒத்திவைக்க உள்ளதாகவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
000