Ads
பாகிஸ்தானில் பேருந்து வண்டியை குறி வைத்து கண்ணிவெடி தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு
பாக்கிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் டர்பெட் நகரில் நேற்று (04) திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பஸ்ஸில் 36 பேர் பயணித்தனர். குறித்த பஸ் நியூ பஹ்மென் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தை குறிவைத்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் பேருந்தில் பயணித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த கண்ணிவெடி தாக்குதலை பலூசிஸ்தான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நடத்தினரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
000
Info
Ads
Latest News
Ads