அனுர உறுதியளித்தும் அகற்றப்படாத பருத்தித்துறை இராணுவ முகாம் - யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதித் தடைகள் - பொதுமக்கள் மத்தியில் வலுக்கும் சந்தேகம்
பருத்தித்துறை இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரையில் அது அகற்றப்படாமலே இருக்கின்ற நிலையில் அகற்றப்பட்ட வீதித் தடைகளும் யாழ்ப்பாணத்தில் மீண்டும் திடீரென அமைக்கப்பட்டு வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தையும், ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது அரசாங்கம் மக்களுக்கு இடையூறாக இருக்காதென்றும், கடந்த கால அரசுகள் போன்று செயற்படாதென்றும் கூறி யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாபப்பு பகுதியில் உள்ள மக்களின் நிலைங்களை விடுவிப்பதாகவும் வீதிகளை திறப்பதாகவும் மட்டுமல்லாது இராணுவ முகாம்களை அகற்றுவதாகவும் கூறியிருந்தது மட்டுமல்லாது பருத்தித்துறை இராணுவ முகாமை அகற்றுவதாகவும் அறிவித்திருந்தது.
ஆனாலும் குறித்த இராணுவ முகாம் மட்டுமல்லாது அனுர அரசாங்கம் கூறிய எதனையும் செய்ததாகவோ அன்றி மக்கள் பெற்றுக்கொண்டதாகவோ தெரியவில்லை.
இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பல்வேறு காரணங்களால் நீண்டகாலமாக இருந்து, புதிய ஆட்சி வந்ததும் குறித்த வீதித் தடைகள் தேவையற்றது என கூறி அகற்றப்பட்ட வீதித் தடைகள் மீண்டும் இருந்த இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர் முடிவுற்ற பின்னர் வீதிகளில் காணப்பட்ட தேவையற்றதும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுமாக இருக்கும் சோதனைச் சாவடிகளை அகற்றுமாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
இந்நிலையில் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு தேர்தல் பிழரசாரத்துக்காக வந்து சென்ற சில மணி நேரங்களில் இங்கு இருந்த பல சோதனைச் சாவடிகள் உடனடியாக அகற்றப்பட்டன.
எனினும், அந்தச் சோதனைச் சாவடிகள் தற்போது மீண்டும் அதே இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசு சோதனைச் சாவடிகளைத் தாமே அகற்றுவதும் மீண்டும் தாமே அமைப்பதுமான இந்த நடவடிக்கைகள் தேர்தலுக்கான ஒன்றுதானா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000