சினிமா செய்திகள்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருக
ஜெயிலர் 2 ......வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர்
சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி
குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்
பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெ
35 வயது வரை சினிமாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம்.இந்த ஆண்டு தமன்னா நடிப்
கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்
உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படமும் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் டகோயிட் படத்தில் இருந
Ads
 ·   ·  2189 news
  •  ·  1 friends
  • 1 followers

சிற்றி வன்பொருள் நிறுவன சுண்ணக்கல் விவகாரம் - வாகனம் மற்றும் கற்களை விடுவித்த நீதிமன்றம்

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் சாவக்கச்சேரியில்  வழிமறிக்கப்பட்ட சுண்ணக்கல் ஏற்றிய சிற்றி வன்பொருள் வாணிப நிறுவனத்தின் பாரஊர்தியை 5 இலட்சம் ரூபா பிணையில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது - 

கடந்த வாரம் சாவகச்சேரி பகுதியில் இரவு நேரம் பார ஊர்தி ஒன்றில் சுண்ணக்கல் ஏற்றிச் செல்லப்படுவதாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனத்தை வழிமறித்திருந்தார்.

அச்சமயம் வாகன சாரதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் குறித்த பொருளை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதி தொடர்பான வாய்த் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் பொலிசாரின் தலையீடு காரணமாக குறித்த வாகனம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

இவ்விடையம் தொடர்பில் சம்பவதினம் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனம் உரிய அனுமதிகள் பெறாது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் வாகனத்தை தான் மறித்ததாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபார சிற்றி வன்பொருள் வாணிப நிறுவனத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது சகல அனுமதிக்களும் பெற்றே தாம் அந்த வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வேண்டுமென்றே தமக்கும் நிறுவனத்திற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் நடந்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். 

என் நிலையில் குறித்த வழக்கானது இன்றுமுன்தினம் திங்கட்கிழமை சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வாகனத்தை எடுத்த செல்வதற்கு மன்று அனுமதி வழங்கி இருந்தது. 

இந்நிலையில் நகத்தல் பத்திரம் மூலம் வழக்கு இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நிறுவனத்தின் சார்பில் கலாநிதி குமார வடிவேல் குருபரன் ஆஜராகி இருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் சட்டத்தரணி குருபரன் கருத்துக் கூறும்போது  - 5 இலட்சம் ரூபா பிணயில் வாகனமும் கல்லும் விடுவிக்கப்பட்டது. 

குறித்த வழக்கில் எனது கட்சிக்காரர் கல் அகழ்வு தொழிலை செய்பவர் அல்ல. அனுமதி பெற்றவர்களிடம் பணம் கொடுத்து கற்களை வாகனங்களில் ஏற்றி விற்பனை செய்கிறார். 

2009 ஆண்டு 28 (2) சட்டம் இன்னும் திருத்தப்படவில்லை 1993 தொடக்கம் 2023 ஒழுங்கு விதிகள் யார் அனுமதி பெற வேண்டும் என தெளிவாக கூறுகிறது. 

அதனை விடுத்து அனுமதிகள் என கூறப்படும் விடையங்கள் எந்தச் சட்டத்தில் இருக்கிறது யாரிடம் பெற வேண்டுமென கூறினால் அதனையும் பெறத் தயாராக இருக்கிறோம் என மன்றுக்கு தெரிவித்தேன்.

அதனை விடுத்து இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வராமல் அரச அதிகாரிகளினால் எழுதப்படும் கடிதங்கள் சட்டமாக கொள்ள முடியாது.

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஊடகங்களுக்கு தெரிவித்த பகுதியில் எனது கட்சிக்காரர் கற்களைப் அகழவில்லை. பலாலி பகுதியில் உரிய அனுமதி பெற்றவரிடம் கற்களை கொள்வனவு செய்தார் .

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பொலிசாரின் அதிகாரங்களை கையில் எடுப்பது தொடர்பில் மன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதற்கு தனியான முறைப்பாடு ஒன்று இருப்பதால் அது பற்றி பின்னர் முடிவெடுப்போம். 

பொலிசார் குழப்பகரமான சூழ்நிலை இருந்தபடியால் போலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். குறித்த வழக்கில் சந்தேக நபர் பெயர் குறிப்பிடப்படாமை தொடர்பில் மன்றுக்கு தெரியப்படுத்தினேன்.

அது மட்டுமல்லாது இரண்டு நீதிமன்றங்களில் சுண்ணக்கல் எடுத்துச் செல்வது தொடர்பில் நீதிமன்றங்கள் வழங்கிய கட்டளைகளை முழுமையாக மன்றில் சமர்ப்பித்தோம்.

 சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணையில் வாகனத்தையும் கல்லையும் விடுவித்ததுடன் எதிர்வரும் மாசி மாதம் ஐந்தாம் திகதிக்கு வழக்கு தவணை இடப்பட்டது என்று தெரிவித்திருந்தமை குறிப்பித்தக்கது

  • 402
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads