தென்னாப்பிரிக்க – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் - தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வெற்றி
தென்னாப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி 615 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியின் சார்பில் ரியான் ரிக்கல்டன் 259 ஓட்டங்களையும் அணித்தலைவர் டெம்பா பவுமா 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தநிலையில் Follow On முறையில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 478 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, தென்னாப்பிரிக்க அணிக்கு 58 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதற்கமைய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை கடந்தது.
இதன்படி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற அடிப்படையில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.
000