Ads
சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தர்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட பொலிசாரால் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
குறித்த சோதனையின் போது கால்நடைகளை கொண்டு செல்வதற்கான வீதி அனுமதிப்பத்திரம், வைத்தியரின் சிபாரிசு, பிரதேச சபையின் சிபாரிசு, சுகாதார பரிசோதகரின் சிபாரிசு மற்றும் கால்நடைகளுக்கான நீர் மற்றும் உணவு காற்றோட்ட வசதி என்பதை ஏற்படுத்திக் கொடுக்காமை போன்ற குற்றத்தின் அடிப்படையில் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பொலிசார் தடுத்து வைத்துள்ளதுடன், இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
000
Info
Ads
Latest News
Ads