Ads
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் செயல்முறை ஆரம்பம்!
இலங்கையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளான 2024 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் செயல்முறை ஆரம்பமாகவுள்ளது.
அடுத்த வாரம் மீண்டும் இந்த செயற்பாடு ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, விடைத்தாள் திருத்தும் செயல்முறை 2025 ஜனவரி 08 முதல் ஜனவரி 12 வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை குறித்து சர்ச்சை ஏற்பட்ட நிலையில், குறித்த பிரச்சினை நீதிமன்றம் வரையில் கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
00
Info
Ads
Latest News
Ads