இருண்ட காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது - ஜனாதிபதி
மருந்து, எரிபொருள், உரம் வழங்க முடியாமல் தவித்த கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 09 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்’.
மேலும் அடுத்த சந்ததியினருக்கு இவ்வாறான இருண்ட அனுபவத்திற்கு இடமளிக்காமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கருத்து தெரிவிக்கையில்,
அனைத்து இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கடந்த இக்கட்டான காலப்பகுதியில் இலாபத்தைப் பொருட்படுத்தாமல் சேவையை வழங்கியது என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இன்று அதையே செய்கின்றார் என தெரிவித்தார்,
மேலும் இவ்வளவு குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று நாமும் நினைக்கவில்லை. ஆனால் இன்று நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000