வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் - புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ள விசேட தகவல்
2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 11 சட்டவிரோத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் சுற்றி வளைப்பட்டுள்ளதுடன், 65 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் குறித்த பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக ஹாலி எல, இரத்தினபுரி, தங்காலை, குருணாகல் மற்றும் கண்டி அலுவலகங்களிலும் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ள நபர்கள் அல்லது நிறுவனங்கள் தொடர்பில் பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00