இந்த குதிரை வருதா.. இல்லை போகுதா.. எவ்ளோ நேரம்னாலும் எடுத்துக்கோங்க.. முடிந்தால் விடையை கண்டுபிடிங்க....
ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தெரியும் குதிரை வந்து கொண்டு இருக்கிறதா? அல்லது சென்று கொண்டு இருக்கிறதா? என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான சவால்..எவ்வளவு நேரம் ஆனாலும் எடுத்துக்கொள்ளுங்கள் ஆனால் விடையை கண்டுபிடிக்க வேண்டும்.
ஆப்டிகல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை படங்கள் நம் கண்களையே ஏமாற்ற வைக்க கூடியவை. அதாவது, கானல் நீருடன் இதை ஒப்பிடலாம். மேலோட்டமாக பார்த்தால் ஒருவிதமாகவும் உற்று கவனித்தால் வேறு விதமாகவும் தெரியக்கூடும். எனவே, இந்த இல்யூஷன் படங்கள் சவால் மிக்கவையாக இருக்கும்.
இதனால், ஓய்வு நேரத்தில் நெட்டிசன்கள் பலரும் இந்த இல்யூஷன் படங்களை விரும்பி பகிர்வதோடு, புதிருக்கான விடையை கண்டுபிடிக்கிறார்கள். விடையை கண்டுபிடித்த பிறகு தங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பி அவர்களையும் கண்டுபிடிக்க முடியுமா என சோதித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் தான் தற்போது ஒரு இல்யூஷன் படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் இந்த இல்யூஷம் படம் பலரையும் குழப்பி விட்டு சென்று இருக்கிறது. பொதுவாக இல்யூஷன் படங்கள் என்றால் கற்பனை கலந்த ஓவியங்களாக பெரும்பாலும் இருக்கும். ஆனால், இந்த இல்யூஷன் படம் அசல் படமாக உள்ளது. அமெரிக்காவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பனிபடர்ந்த ஒரு இடத்தில் கருப்பு நிற குதிரை ஒன்று தென்படுகிறது. இந்த குதிரையை கேமராவை நோக்கி வருகிறதா.. அல்லது எதிர்திசையில் செல்கிறதா.. என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த அலேசியா வில்வார்டு என்பவர், தன்னாலே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உள்ளதாக கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பனியில் உங்கள் குதிரை கருப்பாக இருந்தால்... குதிரை உங்களை நோக்கி வருகிறதா.. இல்லை உங்களிடம் இருந்து விலகி செல்கிறதா என்பதை உண்மையாகவே சொல்ல முடியவில்லை என்று பதிவிட்டு இருக்கிறார். அண்ணாமலை சொன்னது உண்மையல்ல.. தஞ்சை நாட்டியாஞ்சலி ரத்துக்கு காரணம் யார்? தமிழக அரசு பரபர விளக்கம்! இணையத்தில் வைரல் ஆகும் இந்த படத்திற்கு பல நெட்டிசன்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், நீங்கள் பனியை பார்த்தால் இதற்கான விடையை கண்டுபிடித்து விடலாம். பனிக்கட்டிகளை இழுத்து போடுவதை பார்க்க முடிகிறது. எனவே இந்த குதிரை சென்று கொண்டுதான் இருக்கிறது. என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசனோ.. இதற்கான விடை குதிரையின் உரிமையாளர்தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த குதிரை செல்கிறதா? இல்லை வருகிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்கள்...