சினிமா செய்திகள்
என்.எஸ்.கிருஷ்ணனின் சமயோசித யோசனை
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட்டில் வெளிக்கதவு சாத்தியிருந்தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும்.வெளி
நகைச்சுவையில்  விசுவரூபம் எடுத்தவர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்....... வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்ப
’வேட்டையன்’ படத்துடன் ரிலீஸ் ஆகிறது ‘விடாமுயற்சி’ டீசர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அஜித் நடித்த 'விடாமுயற்சி' படத்தையும் தயாரித்துள்ளது என்பதும், 'விடாமுய
‘மெய்யழகன்’ படத்தின் 18 நிமிட காட்சிகள் நீக்கம்
“இன்று முதல் சில காட்சிகள் நீக்கப்பட்டு, 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும். மெய்யழகனின் நீளம் மட்ட
தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி
பிரபல நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிதுன் தா என்றும் அழைக்கப்ப
அரவிந்த் சாமியின் மகன் அடுத்த ஹீரோவாக ரெடி
இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த் சாமி. இவரைப் போல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என ஏங்காத பெண்களே இல்லை.ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன
மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை என உறுதிப்படுத்திய நடிகர்
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி, இந்த முடி
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
Ads
 ·   ·  7961 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியை அதிகரிக்கலாம் : டயனா கமகே

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இவ்வாறு தெரிவித்தார்.


இரவுப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


“ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் இரவு நேரங்களில் பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கான பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மற்றும் இரவில் உணவகங்களைத் திறந்து வைப்பது உள்ளிட்ட இரவு நேரப் பொருளாதாரத்தை நாடுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% அதிகரிக்க முடியும். உலகின் பல நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு நேரப் பொருளாதாரத்தின் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்கின்றன.


வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, நம் நாட்டு மக்களும் இரவு நேரங்களில் உணவகங்களுக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு கேளிக்கைகளில் ஈடுபடுவதையே விரும்புவது வழக்கம். இதன்மூலம் விசேடமாக மதுவரி வருமானத்தையும் அதிகரிக்க அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கிறது. ஒரு நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கும், நாட்டின் நிலையான வளர்ச்சியைப் பேணுவதற்கும், அரச வருமானத்தை அதிகரிப்பது அவசியம்.


இரவு நேரப் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஆனால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும், கொழும்பு போன்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. எனவே, இதுபோன்ற இடங்கள் தொடர்பான சட்ட, விதிமுறைகளை திருத்தம் செய்து, தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.

 இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இந்த நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் இந்த நாட்டிற்கு வந்து பொழுதுபோக்கக்கூடிய வகையில் தற்போதுள்ள சில கட்டுப்பாடுகள் திருத்தப்பட வேண்டும். உதாரணமாக, உணவகங்கள் திறக்கும் நேரத்தை மாற்ற வேண்டும். சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான ஒரு நெகிழ்வான கொள்கைக்கு நாம் செல்ல வேண்டும்.” என்று இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

  • 137
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads