Category:
Created:
Updated:
வற் (VAT) வரி தாக்கம் செலுத்துவதாக கூறி அதிக விலைக்கு உரத்தை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நெற் பயிர் செய்கைக்காக உர மூடை ஒன்றை 9,000 ரூபாவுக்கு விற்பனை செய்யுமாறு வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.எனினும், உர மூடை விலையிலும் வற் வரி தாக்கம் செலுத்துவதாக கூறி வர்த்தகர்கள் அதிகூடிய விலையில் உரத்தை விற்பனை செய்வதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.