சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
Ads
 ·   ·  8058 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல்

வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் போராட்டத்தினை காணோளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வவுனியாவிற்கு நேற்று (05) காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு நேற்று போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்ப்பட்ட போராட்டகாரர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர். இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காறர்களுக்கும் இடையில் முரன்பாடு ஏற்ப்பட்டது.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணோளி எடுத்த மீரா ஜாஸ்மின் சார்ல்ஸ்நையஸ் ஆகிய பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட இருவருக்கும் பொலிஸாருக்கிடையே தர்க்கமும் ஏற்பட்டிருந்தது. பெண் பொலிஸாரினால் இருவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு கைது செய்யப்பட்டார்

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை , பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னினைப்படுத்த போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  • 584
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads