பரோலில் வந்தார் ஆஸ்கார் பிஸ்டோரியஸ்
தென்னாப்பிரிக்காவின் பாராலிம்பிக் நட்சத்திரம் ஆஸ்கார் பிஸ்டோரியஸுக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனது காதலியான ரீவா ஸ்டீன்காம்பை கொலை செய்த குற்றத்திற்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்திருந்த நிலையில் இவ்வாறு சிறை விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமது காதலி ரீவா ஸ்டீன்கேம்பைக் கொலைசெய்ததற்காக அவர் 2014ஆம் ஆண்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிஸ்டோரியஸ் 2013ஆம் ஆண்டில் காதலர் தினத்தன்று ஸ்டீன்கேம்பைச் சுட்டுக் கொலைசெய்தார்.
முதலில் 2014ஆம் ஆண்டில் நோக்கமில்லா கொலைக் குற்றத்திற்காக ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, பின்னர் கொலைக் குற்றம் நிரூபமணமானதும் 2016ஆம் ஆண்டில் 6 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மிகக் குறைவான தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிய உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டில் ஆஸ்கார் பிஸ்டோரியசின் தண்டனையை 13 ஆண்டுகள் 5 மாதங்களுக்கு அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.