இளவயதில் நீதிபதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்
இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்மணி ஒருவர் தேர்வாகியுள்ளார். வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தனது 31வது வயதில் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இலங்கை வரலாற்றில் ஓர் இளம் தமிழ் பெண் நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யவுள்ளமை தமிழ் மக்கள் அனைவராலும் பெருமைப்படத்தக்க விடயமாகும்.
அதேவேளை இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ளது. நாடளாவிய நீதியில் இடம்பெற்ற நீதிபதிகளுக்கான போட்டியில், மாதுரி அகில இலங்கை ரீதியில் இவர் 12ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான இளம் தமிழ் நீதிபதி என்ற சிறப்பையும் இவர் பெற்றுள்ளார். பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.