சினிமா செய்திகள்
எம். ஆர். ராதாவின் மனசு..
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் ஒரு நாள் தன்னோட ஒப்பனையாளர் கஜபதியை அழைத்து கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து இளங்கோவனைத் தெரியுமா என்று கேட்டார்நல்லா தெ
நடிகர் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி கூறிய உண்மை
90 ஆம் காலக்கட்டங்களில் பிரபல நடிகர் ரஞ்சித். இவர் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகர் ரஞ்சித் 1999
ஷாலின் ஷோயா கட்டிய கனவு வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஷாலின் ஷோயா. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். மலையாள
தாயின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்ட நடிகர்
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரின் இறுதிச்
மூன்றாவது திருமணம் செய்ய போகும் நடிகர்
இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா  தமிழில் அன்பு என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் சுமாராக ஓடிய போதும், இந்த படத்தில் வரும்
அமெரிக்காவில் ஷார்ட் உடையில் நடிகை அஞ்சலி
தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பாப்புலர் நடிகை அஞ்சலி. அவருக்கு ஏராளம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.தற்போது நியூயார்க்கில் இருக்கும் அஞ்சலி ஷார்ட் உடைய
கங்குவா படம் பற்றிய அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள படங்களில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக உள்ளது கங்குவா.சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த பட
கனிகாவிற்கு வளையல் அணியும் விழா
கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன்-கனிகா இருவரும் கர்ப்பமாக இருப்பதாக சந்தோஷ செய்தி வெளியிட்டார்கள். இந்த நிலையில் கனிகாவின் 5வது மாத நிகழ்ச்சி அழகாக
9 நாள் முடிவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தின் மொத்த வசூல்
தனக்கு கிடைத்த வாய்ப்பை வேட்டையன் என்ற படத்தை இயக்கி தனது திறமையை வெளிக்காட்டி இருக்கிறார் ஞானவேல்.இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சு வாரி
நடிகை ரம்யா கிருஷ்ணன் விவகாரத்து செய்கிறாரா?
தமிழில் 1983ம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்கிற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.ஐட்டம் டான்ஸ், அம்மன் வேடம், போல்டான கதாபாத
எஸ்.எஸ் சந்திரன் வேண்டாம்; கவுண்டமணியை போடுங்க - நடிகர் ராமராஜன்
கரகாட்டக்காரனில் கண்டிஷன் போட்டு ஜெயித்த ராமராஜன்கரகாட்டக்கரன் படத்தில் கவுண்டமணி இல்லை என்றால் நான் படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று ராமராஜன்
Ads
 ·   ·  7984 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அல் ஷிபா மருத்துவமனையில் பணயக்கைதிகள்; இஸ்ரேல் வெளியிட்ட ஆதாரம்

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில், பணயக்கைதிகளை ஹமாஸ் வைத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் திகதி ஹமாஸ், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொன்றதுடன் , இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பணயக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுவரும் நிலையில் காசாவில் தரைவழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர், அங்குள்ள மருத்துவமனைகளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கி உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதன் காரணமாக அல்-ஷிபா மருத்துவமனையில் இருந்த பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர்.

இவ்வாறான நிலையில் அல்ஷிபா மருத்துவமனையில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் பாதுகாப்பு படை, எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில்,

ஒரு நபரை ஆயுதம் ஏந்திய சிலர் மருத்துவமனைக்குள் கொண்டு வருவதும், ஒருவரை ஸ்டிரெச்சரில் கொண்டு வருவதும் பதிவாகியிருக்கிறது. "நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் என இஸ்ரேலிய பகுதியில் இருந்து கடத்தப்பட்டவர்களை ஆயுதம் ஏந்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் கொண்டு வந்துள்ளனர்.

பணயக்கைதிகளில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனை படுக்கையில் கொண்டுசெல்லப்படுகிறார். மற்றவர் நடந்து செல்கிறார். படுகொலை நடந்த அக்டோபர் 7ஆம் தேதி, அல் ஷிபா மருத்துவமனை வளாகத்தை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு பயங்கரவாத உள்கட்டமைப்பாக பயன்படுத்தியது என்பதை இந்த காட்சி நிரூபிக்கிறது" என இஸ்ரேல் ராணுவம் விவரித்துள்ளது. இந்த இரண்டு பணயக்கைதிகளையும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி குறிப்பிட்டார்.

  • 146
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads