Ads
பாலஸ்தீனத்தில் ஏற்படப்போகும் பாரிய நெருக்கடி - ஐ.நா எச்சரிக்கை
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களினால் எதிர்வரும் 6 வார காலப்பகுதியில் பாலஸ்தீனத்தில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் நிர்வாகி அச்சிம் ஸ்டெய்னர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலஸ்தீனத்தில் 34 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாக்குதலினால் இதுவரையில் காஸாவில் 41,000 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் , 1,500,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 18 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
Info
Ads
Latest News
Ads