Category:
Created:
Updated:
மதுபான உற்பத்தி நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 6675 மில்லியன் ரூபாவை வரியாக வழங்க வேண்டியுள்ளது. அதனை அறவிடுவதற்காக அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.