தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த நிறுவன உரிமையாளருக்கு விளக்கமறியல்
தரமற்ற இம்யூனோகுளோபுலின் (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனத்துடனான தகவல் பரிமாற்றத்தின் மூலம், குறித்த நிறுவனம் இலங்கை அல்லது வேறு எந்த நாட்டிற்கும் மருந்துகளை ஏற்றுமதி செய்யவில்லை என தெரியவந்துள்ளதாக மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் அதிகாரிகள் கடந்த தினம் தெரிவித்திருந்தனர்.அதற்காக இலங்கை நிறுவனம் ஒன்று போலி ஆவணங்களை சமர்ப்பித்திருந்தமை தெரியவந்திருந்தது. அதன்படி, போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இந்தியாவில் இருந்து இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.