Category:
Created:
Updated:
அனைத்து மின்சார ஊழியர்களையும் நாளை (1) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சார சபையை விற்பனை செய்ய அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாளை நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.