சினிமா செய்திகள்
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
Ads
 ·   ·  8232 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இறந்தவரின் ஐபோனை குடும்பத்தினர் பயன்படுத்த முடியுமா?

ஆப்பிள் நிறுவனம் பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தரவுகளை மரணத்துக்குப் பின் நம்பகமான ஒருவரிடம் ஒப்படைக்க ஒரு வழியை உருவாக்கியுள்ளது. iOS 15.2, iPadOS 15.2 மற்றும் macOS 12.1 ஆகியவற்றுக்குப் பிந்தைய எந்த இயங்குதளத்தைக் கொண்ட ஆப்பிள் சாதனத்திலும் இந்த வசதி இருக்கும்

தகுதிவாய்ந்த ஐபோன் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களில் Legacy Contact என்ற அம்சம் இருக்கும். இதில் மரணத்துக்குப் பின் யாரிடம் தனது ஐபோன் ஒப்படைக்க வேண்டுமோ அவரிடம் உங்கள் சாதனத்தின் தனித்துவமான ஆக்ஸர் கீ ஒன்றைக் பகிர வேண்டும். உங்கள் இறப்புக்குப் பின்புதான் அவர் அதை பயன்படுத்த முடியும்.

இந்த வசதி ஒரு பயனர் தனது இறப்புக்குப் பிறகு அவரது ஆப்பிள் கணக்கில் சேமித்து வைத்திருக்கும் தரவுகளை அவர்கள் நம்பிக்கைக்குரிய ஒருவர் மட்டும் கையாளுவதை உறுதி செய்யும் மிகவும் பாதுகாப்பான வழி என்று ஆப்பிள் நிறுவனம் சொல்கிறது.

ஆனால், இந்த லெகசி காண்டாக்ட் (Legacy Contact) பயனர் இறந்த பிறகு மட்டுமே பயன்படுத்தப்படும். Legacy Contact எனக் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் இறந்தவரின் இறப்புச் சான்றிதழைக் காட்டி, ஆக்ஸர் கீயையும் சமர்ப்பித்த பின்புதான் மொபைலை Unlock செய்ய அனுமதி பெற முடியும். அவர் தரவுகளைக் கையாளுவதற்கு அனுமதி பெறுவதற்குப் பதிலாக, உங்கள் ஆப்பிள் கணக்கை நிரந்தரமாக மூடிவிடவும் கோரிக்கை வைக்கலாம். அதன்படி உங்கள் ஆப்பிள் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டுவிடும்.

iPhone, iPad அல்லது Mac என ஆப்பிள் சாதனங்கள் அனைத்தும் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். Settings க்குச் சென்று , உங்கள் பெயரை கிளிக் செய்யவும். பின், Sign-In & Security என்பதைத் தேர்வு செய்து அதற்குள் Legacy Contact என்ற பகுதிக்குள் செல்லவும்.

இப்போது Add Legacy Contact என்பதைத் தேர்வு செய்யவும். இதற்குள் நுழைவதற்கான அங்கீகாரத்திற்காக, உங்கள் போனுக்கான பாஸ்கோடு எதுவோ அதை சரியாகப் பதிவு செய்ய வேண்டும்.

மேக் லேப்டாப்பில் இந்த வசதியை பயன்படுத்த Apple menu வில் உள்ள System Settings பகுதியில் உள்ள Apple ID பகுதிக்குச் செல்ல வேண்டும். பின், Sign-In & Security பகுதிக்குள் இருக்கும் Legacy Contact என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இப்போது Add Legacy Contact என்பதை கிளிக் செய்து பாஸ்கோடு மூலம் உள்ளே நுழைய வேண்டும்.

மேக் மற்றும் ஐபோனில் இவ்வாறு உள்ளே நுழைந்த பின்பு கிடைக்கும் தனித்துவமான ஆக்சஸ் கீயை நம்பகமான நபரிடம் பகிரலாம். இறப்புச் சான்றிதழை வழங்காத வரை எந்தத் தரவையும் யாரும் அணுக முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே பயனர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களின் பிரைவசி பறிபோகுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. மீண்டும் Settings பகுதிக்குச் சென்று இந்த Legacy Contact ஆக்சஸ் கீயை அகற்றலாம் என்பதையும் ஆப்பிள் பயனர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

  • 273
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads