சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  7908 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (30) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,இன்று காலை பிரதமரோடு கலந்துரையாடி இருந்தேன். வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள் தமிழ் பேசுகின்ற மக்கள். தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தேன் இதற்கு முன்னர் அமைச்சரவையிலும் அவரோடு கலந்துரையாடி இருக்கின்றேன்.ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் தென்னிலங்கையில் இருந்து நியமிக்கப்பட்டு இங்கு வருவதாக அறிந்து தான் அதனை உடனடியாக நிறுத்துமாறும், இங்கிருக்கின்றவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சொல்லியபோது அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அடுத்த அடுத்த கிழமைகளில் இவை நடைமுறைக்கு வரும்.தற்போது வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு இங்கு மொழிப் பிரச்சனை, தங்குமிட பிரச்சினைகள் இருக்கின்றது, இதனால் அதற்கே அவர்கள் உழைப்பது செலவுக்கே போய்விடும். இது ஒரு அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது வேறு. என்னை பொறுத்தவரையில் நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன்.கடந்த காலத்தில் நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று நான் இங்கு நடக்க விட மாட்டேன்.  ஏற்கனவே தொல்லியல் திணைக்களத்தின் கீழ் வடக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பிய போது அவர்களும் திருப்பி அனுப்பபடுவார்கள் என தெரிவித்தார்.

  • 183
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads