Category:
Created:
Updated:
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பின்னணியில் உழைக்கும் மக்களின் சம்பளத்தை உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.