Category:
Created:
Updated:
நாட்டு மக்களுக்கு தரமான மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான நிதியை நிதியமைச்சு வழங்கும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.