நவராத்திரி உண்ணாவிரதம் இருந்த அதிகாரிக்கு இண்டிகோ பணிப்பெண் செய்த செயல்
ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பணிப்பெண்ணின் செயலை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா, இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் நவராத்திரி உண்ணாவிரதம் இருந்துள்ளார். அதனால் அங்கு கொடுக்கப்பட்ட உணவை மறுத்துள்ளார்.
ஆனால், விமானப் பணிப்பெண் ஒருவர், அவர் சாப்பிடக்கூடிய பொருட்களை தட்டில் வைத்து கொடுத்துள்ளார். இதனை பார்த்தவர் ஆச்சர்யமடைந்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, அச்சம்பவத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், தெய்வீக அன்னை உங்களை வெவ்வேறு வடிவங்களில் கவனித்துக்கொள்கிறார். இன்று அவர் IndiGo 6E குழு உறுப்பினரான பூர்வியாக வந்தார். நவராத்திரி விரதம் காரணமாக நான் ஸ்நாக்ஸ் சாப்பிடாததால் சாபுதானா சிப்ஸ், டில் சிக்கி & டீயுடன் பணிப்பெண் எனக்கு உணவு வழங்கினார். நான் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது அவர் பணம் வேண்டாம் சார். நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன் எனக் கூறினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த உணவு தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம், ஐயா, நீங்கள் சமீபத்தில் எங்களுடன் விமானத்தில் பயணம் செய்தபோது எங்கள் குழு உறுப்பினர் பூர்வியுடன் உங்களின் மனதைக் கவரும் அனுபவத்தைப் பற்றி அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.
உங்களின் எதிர்கால பயணங்களில் உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். நவராத்திரி வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளது.