Category:
Created:
Updated:
ஹமாஸ் தீவிரவாதிகள் அனைவரையும் கூண்டோடு ஒழிப்போம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபூண்டுள்ளார். ஹமாஸ் தீவிரவாதி ஒவ்வொருவரும், இறந்த மனிதன் என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நெதன்யாகு கூறியுள்ளார்.
இஸ்ரேலில் போர் பயிற்சி பெற்ற 3,60,000 பேர் காசா அருகே வரவழைக்கப்பட்டுள்ளனர். காசா எல்லையை ஒட்டியுள்ள இஸ்ரேலிய குடியிருப்புகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இஸ்ரேல் ராணுவம் களம் இறங்கியுள்ளது.