இஸ்ரேலுக்கு ஆதரவு கூறிய பிரபல பாடகர்
இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில் காசா முனையிலிருந்து லட்சக் கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் கும்பல் நடத்திய தாக்குதலால் பலர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் இஸ்ரேலில் போர் சூழல் தீவிரமடைந்து வருகிறது.
இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ளதால் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் கணிசமான அளவில் வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல பாடகர் ஜஸ்டின் பைபர் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக காசாவின் புகைப்படத்தை பகிர்ந்து இஸ்ரேலுக்கு பிரார்த்திப்பதாக பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன்பின்னர், புகைப்படத்தை மாற்றி பதிவிட்டதாதாக தன் தவற்றை உணர்ந்த ஜஸ்டின் பைபர் சிறிது நேரத்தில் அப்பதிவை நீக்கிவிட்டு மீண்டும் மற்றொரு பதிவைப் பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.