பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாகிவிடுமோ என அஞ்சும் உலக நாடுகள்
எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் கணிப்பு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது போன்று பல கணிப்புகள் இருந்தாலும் பாபா வாங்கா கணித்து கூறியவை போல் இது வரை யாரும் துல்லியமாக கணித்து கூறியதில்லை எனலாம்.
தனது சிறு வயதில் கண் பார்வை இழந்த பாபா வாங்கா இதுவரை கணித்த உலகின் மிக பெரிய நிகழ்வுகள் எல்லாம் நடந்தே உள்ளன. இவர் கணித்த இரட்டை கோபுர தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது, செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானா மரணம், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட விடயங்கள் எல்லாம் அப்படியே நடந்தன.
2023 ஆம் ஆண்டுக்கான இவரது கணிப்புகள் தற்போது பேசு பொருளாகி வருகின்றது. பாபா வாங்காவின் முதல் கணிப்பு இந்தாண்டு மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளது. தற்போது இஸ்ரேல்- ஹமாஸ் படைக்கு இடையே போர் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த முதல் கணிப்பு முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
இதில் உலக நாடுகள் இரு பிரிவுகளாகப் பிரிந்து போக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் மூன்றாம் உலக போர் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது. அரபு நாடுகளும் ரஷ்யாவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உள்ளநிலையில் போர் தொடரும் பட்சத்தில் மற்ற நாடுகளும் உள்ளே வரலாம் என கூறப்படுகிறது.
இஸ்ரேலில் பல ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளே வரும். அமெரிக்கா உள்ள நுழைவது அடுத்த உலக போருக்கு வழிவகுக்கும் என்பது வல்லுநர்கள் கருத்தாக இருக்கின்றது.