சிறுவர் பாதுகாப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இந்நாட்டு சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் முழுமையான நலன்புரிகள் தொடர்பில் பரந்த ஆய்வொன்றை மேற்கொண்டு பரிந்துரைகளை முன்மொழிவதற்காக 2023 ஏப்ரல் 19 ஆம் திகதியன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய மேற்படி குழு நியமிக்கப்பட்டிருந்தது.
விடயத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆழமான அறிவு மற்றும் நடைமுறைப் பரிந்துரைகளை தயாரிப்பதற்காக சுமார் ஐந்து மாத காலப்பகுதியில் 21 சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
நிறுவனச் சூழல், பெற்றோரின் அரவணைப்பு இன்மை, குடும்பப் பிரச்சினைகள், சமூக ஊடக பாவனை, சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பரந்த அளவிலான விடயப்பரப்பு தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.
அதேபோல் நவீன சமூகத்தின் தேவைகளை நிவர்த்திப்பதை இலக்காக கொண்டு சிறுவர் பாதுகாப்புக்காக இயங்கும் நிறுவனங்கள், நிர்வாகங்கள் மற்றும் சட்ட பாதுகாப்பின் போதுமான தன்மை தொடர்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது