சினிமா செய்திகள்
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
கங்குவா படத்துக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு
சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரா
வேட்டையன் படத்தை பின்னுக்குத் தள்ளியது சிட்டாடல்
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர்,
டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி வெளியான தகவல்
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போதுதான் யாஷ
பூனம் பாஜ்வா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை க
கமலஹாசனின் பிறந்தநாளான இன்று தக் லைஃப் படத்தின் டீசர் வெளியீடு
கமல்ஹாசனின் 69வது பிறந்தநாளான இன்று ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் விதமாக, மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத
அபிஷேக்பச்சனுக்கு பெருமையைக் கொடுத்த ஐஸ்வர்யா ராய்
கடந்த 2007ம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகரும், அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.இத்தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற மகள்
பிக்பாஸ் விக்ரமன் நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார்
பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விக்ரமனுக்கு பார்வையாளர்களின் நீடித்த ஆதரவு கிடைத்ததால், அவர் வெற்றி பெறுவார் என பலரும் நம்
ஒரு நாளைக்கு 100 சிகரெட் புகைப்பேன் - ஷாருக்கான்
ஷாருக்கானுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு
 ‘பிளடி பெக்கர்’ படம் படுதோல்வி
தீபாவளி அன்று திரைக்கு வந்த கவின் நடித்த "பிளடி பெக்கர்" என்ற திரைப்படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்த படத்தின் தமிழக விநியோகஸ்தருக்கு சுமார் 8 கோட
 விஜய்க்கு ஆதரவாக சீமானை விமர்சித்த நடிகை விஜயலட்சுமி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கொள்கைகள் குறித்தும் அவரது கருத்துகள் குறித்தும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். அவர், "லாரியில் அடிபட்ட
Ads
 ·   ·  8036 news
  •  ·  5 friends
  • I

    9 followers

சுமந்திரனே நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து நீதிக்கட்டமைப்பை மலினப்படுத்தினார் - நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து  நீதித்துறையை மலினப்படுத்தினார்.

சாதாரண பிரஜை இவ்வாறு செயற்பட்டிருந்தால் கடூழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார். நீதிமன்றத்தை விமர்சித்து விட்டு இன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் குறித்து கேள்வி எழுப்புவது வேடிக்கையாகவுள்ளது என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அமர்வின் போது எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றை முன்வைத்து  உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் விவகாரம் தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நாட்டின் நீதிமன்ற  கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 2020.10.20 ஆம் திகதி பாராளுமன்ற உரை ஊடாக நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார்.'உயர்நீதிமன்றம் பயனற்றது,உயர்நீதிமன்றத்தில் உள்ளவர்கள் வீடு செல்ல வேண்டும்' என்று கடுமையாக  விமர்சித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் வழக்கு விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நவாஸ் கட்டளைப் பிறப்பித்ததாக இவர் (சுமந்திரன்) குறிப்பிட்டார்.பாராளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிமன்றத்தை மலினப்படுத்தினார்.இவரை போன்று எவரும் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சிக்கவில்லை.இன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பில் கருத்து தெரிவிக்கிறார்.

எம்.ஏ.சுமந்திரனை போன்று நீதிமன்ற கட்டமைப்பை பிறிதொருவர் விமர்சிக்கவில்லை.பிறிதொருவர் விமர்சித்திருந்தால் இன்று அந்த நபர் கடூழிய சிறைதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பார்.இவரே   (சுமந்திரனை நோக்கி)  நீதிமன்றத்தை மலினப்படுத்தினார் என்று சாடினார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் நான் குறிப்பிட்ட விடயத்துக்கு பொருத்தமற்ற வகையில் நீதியமைச்சர் உரையாற்றுகிறார். முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் நீதியமைச்சர் முறையாக பதிலளிக்கவில்லை.

நான் நீதிமன்றத்தை விமர்சித்ததாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டு நான் உரையாற்றவில்லை என்றார்.

  • 211
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads