Category:
Created:
Updated:
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை எந்த நேரத்திலும் கட்சியில் இணைத்து கொள்ளலாம். அவரை ஏற்றுக் கொள்ளத் தயார். ஆனால் அவருக்கு எந்தப் பதவியையும் வழங்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உப அமைப்புப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.