Ads
உருளைக்கிழங்குக்கான வரி நீடிப்பு
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட பண்ட வரி செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் அடுத்த 4 மாதங்களுக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு 01 கிலோ கிராமிற்கு 50 ரூபா விசேட பண்ட வரியை இந்த வருடம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் அமுல்படுத்துவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
குறித்த வரி 06 மாத காலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேலும் 04 மாதங்களுக்கு நீடிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads