சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
நயன்தாராக்கு குவியும் ஆதரவு
நடிகர் தனுசுக்கு எதிராக நடிகை நயன்தாரா குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு நடிகைகள் பலர் ஆதரவு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள
தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார்
நடிகை கஸ்தூரி தமிழகத்தை ஆளும் திமுக மற்றும் திராவிட சித்தாந்தம் பேசுபவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் இந
குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்
குழந்தைகள் தினமான இன்று நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த, சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட உறுதியேற்போம் என
புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாட்டுக்கு வாங்கிய சம்பளம்
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற படம் புஷ்பா. இதன் இரண்டாம் பாகம் நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வந்த ந
அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப் போடப்பட்டிருப்பதாக கூறினார் நடிகை கஸ்தூரி
சமீபத்தில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவ
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்
Ads
 ·   ·  8058 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வைத்தியத்துறைக்கு பாரிய நெருக்கடி

வைத்தியர்களும் வைத்திய நிபுணர்களும் நாட்டை விட்டுச் செல்வதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்ட வைத்திய துறைக்கு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் செயலாளர் டாக்டர் சசிக்குமார் தெரிவித்தார்.மட்டு. ஊடக அமையத்தில் இன்று (1) நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே இவை தெரிவிக்கப்பட்டது.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளர் வைத்தியர் சசிக்குமார், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட இணைப்பாளர் தவநேசன் ஆகியோர் இதன்போது கருத்து தெரிவித்தனர்.சசிகுமார் மாவட்ட கிளை சங்க செயலாளர் (அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்) - இன்றைய காலகட்டத்தில் நாட்டில் அனைவருக்கும் தெரியும் சுகாதாரத் துறையானது பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.இதே அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பொருத்தவரையில் மாவட்டத்தின் சுகாதாரமும் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.எமது மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை காணப்படுகின்றது.அதைவிட 4 ஆதார வைத்தியசாலைகள் காணப்படுகின்றது. அத்தோடு சிறு வைத்தியசாலைகள் இயங்கிக் கொண்டு வருகின்றது.இன்றைய காலகட்டத்தினை பொறுத்த வரையில் சுகாதாரத் துறை ஏன் பின்னோக்கி செல்கின்றது என பார்த்தோமானால் அதற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றது ஆளணி பற்றாக்குறையே,எமது மாவட்டத்தினை பொறுத்த வரையில் மாவட்டத்தில் ஏற்கனவே ஆளணித்துவம் எந்த ஒரு காலகட்டத்திலும் நிரம்பல் அடையாமல் குறைபாடாகவே காணப்படுகிறது.அடுத்ததாக மருத்துவ உபகரணங்கள் மருந்துகளுக்கான தட்டுப்பாடும் இன்று நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.இதனை நாங்கள் கூர்மையாக கவனிப்போமானால் மருந்துகளானது இன்று பொறுத்த வரையில் ஒன்று பற்றாக்குறையாக இருக்கின்றது.தரம் குறைந்த மருந்துகள் வருகின்றது, அத்துடன் இருக்கும் போது மக்களுக்கான சேவையை செய்வதில் எங்களுக்கு நிறைய கஷ்டங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.நாங்கள் வெளியில் வந்து மருந்துகளை வாங்குவதற்கு அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினாலும் அவர்களினால் அந்த தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.ஏனென்றால் மருந்துகளின் விலை அதிகமாகவும் காணப்படுகிறது, இந்த காலகட்டத்தில் விலை குறைப்பு சுமுகமாக நடைபெறவில்லை. இதனால் நோயாளிகள் சொல்ல முடியாத துயரங்களுக்கு உள்ளாகி அவர்களின் அசௌகரியகங்களினால் எமது வைத்தியர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றார்கள்.இதற்கு இதுவரையில் எதுவித தீர்வும் எட்டப்படவில்லை அத்தோடு பார்க்கும் போது எமது வைத்தியர்களை பொருத்த வரையில் இன்று சமூக மட்டத்தில் இருக்கும் பெரிய பிரச்சினை வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கின்றார்கள்.இது முக்கியமாக வைத்தியர்கள் மாத்திரம் அல்ல விஷேட நிபுணர்களுமே செல்கின்றார்கள். ஏன்? அவர்கள் செல்கின்றார்கள் என்று பார்த்தால் அவர்களுக்கு அங்கே மூன்று அல்லது நான்கு சிலவேளைகளில் 10 மடங்கு அதிகமான சம்பளங்கள் வழங்கப்படுகிறது.அந்த நாடுகளில் சமூக பொருளாதார ஸ்திரதன்மை இருப்பதினால் அவர்களின் வருங்காலம் அங்கு ஸ்திரதன்மையை அடையும் இங்கே இருப்பது கேள்விக்குறியாக்கப்படும் என்கின்ற பயத்தின் காரணமாகவே இன்று இந்த நாட்டை விட்டு அதிகமான மருத்துவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள்.எமது மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் அதிகமான மருத்துவர்கள் வெளி மாவட்டங்களிலிருந்து பயணம் செய்துதான் எமது மாவட்டத்திற்கு வந்து வேலை செய்கின்றார்கள்.அவர்களுக்கு இங்கு போதிய வசதிகள் இல்லை. முக்கியமாக வாழ்க்கைச் செலவினம் அதிகரித்திருக்கிறது, வாடகைகள் அதிகரித்து இருக்கின்றது, இங்கு அவர்களுக்குரிய விடுதி வசதிகள் இல்லை, அதிகமான இடங்களில் அவர்கள் வெளியில் தங்க வேண்டிய தேவைப்பாடுகள் காணப்படுகின்றது.அத்தோடு அவர்களது போக்குவரத்து செலவுகள் அதிகம், போக்குவரத்து செய்யக்கூடிய வசதிகள் சில இடங்களில் இல்லை இவ்வாறு அவர்கள் சொல்ல முடியாத துயரங்களினை அனுபவித்துக் கொண்டிருப்பதனால் அவர்களின் முதலாவது விருப்பமாக வெளிநாடு செல்ல வேண்டும் என்கின்ற ஆசை அவர்களிடம் வந்து கொண்டிருக்கின்றது.அதனால் இது இவ்வாறாகவே இருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை செய்கின்ற வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக குறையும் அதனால் சுகாதாரத்துறை இன்னமும் பின்னோக்கிச் செல்லும் என்பது எங்களது கருத்து.இதனை நாங்கள் அடிக்கடி வலியுறுத்திக் கொண்டிருப்பதன் தேவை என்னவென்றால் மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது தெரிய வேண்டும் என்பதற்காகவேயாகும்.இதன்போது கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தியாகாராஜா தவநேசன்,சுகாதார துறையினை பொறுத்தவரையில் நாடளாவிய ரீதியில் பாரிய சவாலை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றது.நாங்களும் இக்கட்டான காலகட்டத்தில் தான் தற்போது இருக்கின்றோம். அது அனைவருக்கும் தெரிந்த விடயம் வைத்தியசாலைகளில் மருந்து இல்லை, வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள் என்பது நாங்கள் தினமும் கேள்விப்படுகின்ற விடயங்களாக இருக்கின்றது.இன்று வைத்தியர்கள் மாத்திரம் நாட்டை விட்டு வெளியேறவில்லை சாதாரணமாக நாள் வேலை செய்கின்றவர்கள் கூட நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். காரணம் நாங்கள் அறிந்தது இங்கு இருக்கின்ற பொருளாதாரம் நெருக்கடியான நிலைமை.வைத்தியர்களை பொருத்தவரையில் முதலாவதாக சம்பளப் பிரச்சனை. வாழ்க்கைச் செலவு அதிகரிக்கின்ற நிலையிலே வாழ்க்கையை அவர்களால் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு சம்பளம் வழங்கப்படவில்லை.அதற்கு மேலதிகமாக நாங்கள் அறிந்த விடயம் வரி என்கின்ற ஒரு செலுத்தும் திட்டத்திலேயே கொண்டு வந்து இன்னமும் வழமையாக பெற்ற சம்பளத்தை விட குறைவான சம்பளத்தையே பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.இரண்டாவது விடயம் போதிய வசதிகள் இல்லை. உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டோமானால் மட்டக்களப்பிலே இருக்கின்ற கிட்டத்தட்ட அரைவாசிக்கு மேற்பட்ட வைத்தியர்கள் சுகாதார ஊழியர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இருந்து வைத்தியர்களும் ஏனைய சுகாதார ஊழியர்களும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றார்கள்.இப்போது நாட்டிலே இருக்கின்ற எரிபொருள் விலை மற்றும் இங்கு இருக்கின்ற தங்குமிடத்திற்கான செலவு, உணவு செலவுகள் எல்லாவற்றையும் பார்க்கின்ற போது அவர்களால் பெறுகின்ற சம்பளம் இவற்றை தங்கிக் கொண்டு இங்கே இருக்கக்கூடிய நிலைமை இல்லை என்கின்ற காரணத்தினால் தான் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள்.பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றியும் யோசிக்கின்றார்கள் அதனால் தான் மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் இதுவரை காலத்திற்கு மட்டக்களப்பு வைத்தியசாலையை பொருத்தவரைக்கும் இரண்டு அல்லது மூன்று வைத்திய நிபுணர்கள் வெளியேறி இருக்கின்றார்கள்.கிட்டத்தட்ட 20 வைத்தியர்கள் வெளியேறி இருக்கின்றார்கள். வைத்தியசாலையை விட்டு அதேபோன்று பிராந்திய சுகாதார பிரிவினை பார்த்தால் நான்கு வைத்திய நிபுணர்கள் 10 இற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள்.இதற்கு காரணம் நாட்டிலே இருக்கின்ற பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலைமை. அந்த நிலைமையை சீர் செய்வதன் ஊடாகத்தான் இந்த பிரச்சினையில் இருந்து வெளிவர முடியும்.இரண்டாவது மருந்து தட்டுப்பாடும் அதே பிரச்சனை தான். மருந்து தட்டுப்பாடு பலகாலமாக கூறி வருகின்றோம். ஆனால் அவை நிவர்த்திக்கப்பட்ட பாடு இல்லை.மருந்து தட்டுப்பாடு மருந்துகளின் விலை வெளியில் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை இப்போது கிட்டத்தட்ட ஆறு ஏழு மடங்கு மருந்தின் விலை அதிகரித்து விட்டது.நாங்களும் மருந்தை வெளியில் வாங்குங்கள் என நோயாளிக்கு கூறினால் நோயாளிக்கு அந்த மருந்தினை வாங்கக்கூடிய அளவுக்கு பொருளாதார பலமில்லை.இதனால் நோயாளிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். அடுத்ததாக சத்திர சிகிச்சைக்கான மூலப்பொருட்கள் கிட்டத்தட்ட சில பொருட்களை நோயாளிகள் வெளியில் இருந்து வாங்கி வந்து தான் அரச வைத்தியசாலையிலே சத்திர சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.மற்றது உபகரணங்கள் ஜ.சீ.யு மற்றும் மற்ற விடயங்களை எடுத்தால் மருத்துவ உபகரணங்கள் உடைய பற்றாக்குறை. இப்போது சி.டி ஸ்கேன் மட்டக்களப்பில் இல்லை. இப்போது நோயாளிகளை இங்கிருந்து சி.டி.ஸ்கேன் எடுப்பதற்கு அம்பாரை வைத்தியசாலைக்கு அனுப்புகின்றோம்.சி.டி ஸ்கேன் பழுதடைந்தால் அதனை திருத்தக் கூடிய அளவிற்கு நிதி வளம் இல்லை கேட்டால் அரசாங்கம் காசு இல்லை என கூறுகின்றது.கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் சி.டி ஸ்கேன் இல்லை. அதனால் நோயாளிகள் இன்னமும் பாதிக்கப்படுகின்றார்கள் இவ்வாறான விடயங்களுக்கு தீர்வு எங்களால் கொடுக்கக்கூடிய அளவுக்கு இல்லை. அரசாங்கத்தினால் தான் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்.

  • 178
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads