Category:
Created:
Updated:
இந்து மற்றும் பௌத்த மக்களுக்கு இடையில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இத்தகைய மோதலை உருவாக்குவதன் மூலம் இந்தியாவின் ஆதரவை தடுத்து நிறுத்த முடியும் என எதிர்க்கட்சிகள் நினைத்து வருவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
எனவே இந்த விடயத்தை மிகவும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கம்பஹா லக்சியனே மதுரவில் நேற்று (29) நடைபெற்ற கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.