Category:
Created:
Updated:
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் எண்ணற்ற மாணவர்களை ஊக்குவித்து, அவர்களது கல்விசார் நடவடிக்கைகளை விருத்தி செய்து வருவதால், மன்றம் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. அது தொடர்ந்து பணியாற்றும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர் மன்றத்தின் எதிர்கால முயற்சிகள் மேலும் வெற்றிகளால் நிரப்பப்படட்டும். மேலும் கல்விக்கான மன்றத்தின் அர்ப்பணிப்பு உறுதியாக இருக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் 17ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.