தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது
தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக ஜார்ஜியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து, நேற்று டொனால்டு டிரம்ப் ஆஜரானார். நியூ ஜெர்சியின் நெவார்க்கில் இருந்து விமானம் மூலம் அட்லாண்டா சென்றடைந்த டிரம்ப், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் ஃபுல்டான் கவுண்டி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கைதிகளுக்கான புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட வழக்கமான நடவடிக்கையை தொடர்ந்து டிரம்ப் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், இந்திய மதிப்பில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் பிணைத் தொகை செலுத்தியதும், 20 நிமிடங்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதியானால் டிரம்ப்-க்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவதும் கேள்விக்குறியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.