Category:
Created:
Updated:
வறட்சியான காலநிலையால் 51,035 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கை 10 ஆயிரம் ஏக்கர் மரக்கறி உட்பட ஏனைய பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரு ஏக்கர் விவசாய நிலத்துக்கு 40 ஆயிரம் ரூபா, 1 ஹெக்டர் விவசாய நிலத்துக்கு 1 இலட்சம் என்ற அடிப்படையில் நட்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (24) வாய்மூல விடைக்கான வினாக்களின் போது வரட்சியான காலநிலையால் சிறுபோக பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நட்டஈடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.