மதுபானங்களின் விலைகளை குறையுங்கள் - டயனா கமகே கோரிக்கை
மதுபானங்களில் விலைகள் அதிகரிக்கப்படுவதனால் மக்கள் கசிப்பு காய்ச்சி குடிக்க நேரிடும் என்பதுடன் போதை மாத்திரையை பயன்படுத்தும் நிலைமையும், இதனால் மதுபானங்களின் விலைகளை குறைக்குமாறு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.
“சுற்றுலாப் பயணிகள் இரவு 10 மணிக்கு பின்னர் உறங்குவதற்காக இந்த நாட்டுக்கு வருவதில்லை. இன்னும் இரவில் திறக்கப்படாது இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் 10 மணிக்கு பின்னர் உறங்கிவிடுகின்றனர்.
மாலைதீவு போன்ற நாடுகளில் இவ்வாறு இல்லை. சுற்றுலாத்துறையினருக்காக விசேட திட்டங்கள் உள்ளன. இப்போதுள்ள நிலைமையிலேயே சென்றால் இதுவரை காலம் கிடைத்த பெறுபேறே கிடைக்கும்.
அழகான நாட்டை இப்படி இரவில் பூட்டி வைப்பதால் பலனில்லை. உலக நாடுகளில் 70 சதவீதம் இரவு நேர பொருளாதாரம் உள்ளது. இது தொடர்பில் யோசனைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளோம்.
இரவு 10 மணிக்கு பின்னர் சுற்றுலா ஹோட்டல்களில் பார்கள் மூடப்படுகின்றன ஏன் இதற்கு மேல் திறந்து வைக்க முடியாது. இவற்றை மாற்ற வேண்டும்.
இதேவேளை மதுபானங்களில் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும்” என்றார்