Ads
அமெரிக்க அதிபராக ஜோ பைடனின் முதல் இந்திய பயணம்
ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்கான, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இந்திய பயணத்தை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக மேற்கொள்ளும் இந்தியப் பயணம் இதுவாகும்.
ஜி 20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது.
இந்நிலையில், ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ம் தேதி இந்தியா வருகிறார். இதை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் உறுதி செய்துள்ளார். மேலும், அதிபர் பைடன் மற்றும் ஜி 20 தலைவர்கள் உலகளாவிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான கூட்டு முயற்சிகள் பற்றி விவாதிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads