மீம்ஸ் மூலம் மக்களை கவர்ந்த நாய் காலமானது
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடப்பவர் என்றால் நாய் மீம்ஸ் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். நாய்களுக்கு இடையேயான உரையாடல் பாணியில் உருவாக்கப்படும் இந்த மீம்ஸ்கள் நெட்டிசன்ஸ் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றவை. இளைஞர்கள் இந்த வகை மீமஸ்களை பகிர்வது மட்டுமின்றி, Doge மீம்ஸ் கதாபாத்திரங்களை தங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு நகைச்சுவையாக பதிவிடுவார்கள்.
Doge மீம்ஸில் முக்கிய கதாபாத்திரமாக விளங்கும் சீம்ஸ் நாய் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. சீம்ஸ் விரைவில் குணமடைவார் என்ற நம்பிக்கை இணையம் முழுவதும் இருந்தது. சீம்ஸ் நாய் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டாக அதன் உரிமையாளர் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த சோகமான செய்தியை அதன் உரிமையாளர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தனர். ஷிபா-இனு இன நாயான சீம்ஸ் இனி கண்களை திறக்காது என்றும், ஆறு மாதங்களாக அவரை துன்புறுத்திய அவரது கடைசி தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சையின் போது அவர் உயிரிழந்தார் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு கீமோதெரபி அல்லது வேறு சாத்தியமான சிகிச்சையை ஏற்பாடு செய்ய நாங்கள் விரும்பினோம், ஆனால் இப்போது அது மிகவும் தாமதமாகிவிட்டது, என்று அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். சீம்ஸ் மகிழ்ச்சியாக இருந்த சில படங்களை அவர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர்.