Ads
வரலாற்று நகரமான லஹைனா 80 விழுக்காடு அழிவு - ஹவாய் மாகாண ஆளுநர்
அமெரிக்காவின் ஹவாய் தீவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக ஆயிரத்து 700க்கும் அதிகமான கட்டடங்கள் நெருப்பில் எரிந்த நாசமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று நகரமான லஹைனா 80 விழுக்காடு அழிந்துவிட்டதாக ஹவாய் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி36 ஆக இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவாய் காட்டுத் தீ பெரும் இயற்கைப் பேரழிவு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads